மூன்று பேருந்துகள் மோதி விபத்து..: 10 பேர் வைத்தியசாலையில்

#Accident #Bus #Police #SriLanka #sri lanka tamil news #Lanka4
Prathees
2 years ago
மூன்று பேருந்துகள் மோதி விபத்து..: 10 பேர் வைத்தியசாலையில்

ஹட்டன்-கொழும்பு வீதியில் கினிகத்தேனைக்கும் தியகலவிற்கும் இடையில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 10 பேர் காயமடைந்து கினிகத்தேனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹட்டனில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸும் கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த லங்காம பஸ்ஸும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கினிகத்தேன பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பஸ்களில் பயணித்த 10 பேர் படுகாயமடைந்து கினிகத்தேனை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த கினிகத்ஹேன பிரதேச வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனத் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!