நீருக்குள் நீண்ட நேரம் முத்தம் - 13 வருட சாதனையை முறியடித்த கனேடிய காதல் ஜோடி

#Maldives #Love #world_news #Tamilnews #Lanka4
Prasu
2 years ago
நீருக்குள் நீண்ட நேரம் முத்தம் - 13 வருட சாதனையை முறியடித்த கனேடிய காதல் ஜோடி

கனடா நாட்டில் கிளவ் டைவர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு நீச்சல் வீரர் ஆவார். நீல் என்பவர் தென்னாபிரிக்காவில் வசித்து வருகிறார். இவர் ஒரு நீச்சல் வீராங்கனை ஆவார். 

இவர்கள் இருவரும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்த போது காதலிக்க தொடங்கினர். அதன் பின் அவர்களுடைய காதல் திருமணத்தில் முடிந்தது. 

இவர்களுக்கு தற்போது ஒன்றரை வயதில் நீவே என்ற மகள் இருக்கின்றார். இவர்கள் தங்களுடைய திருமணத்திற்கு பின் தற்போது தென்னாப்பிரிக்காவில் வசித்து வருகின்றனர். 

இந்த நிலையில் காதலர் தினத்தில் ஏதேனும் புதுமையாக செய்ய வேண்டும் என்று இருவரும் விரும்பியுள்ளனர்.

இதற்காக அவர்கள் இருவரும் மாலத்தீவில் உள்ள லக்ஸ் சவுத் ஆரி அடால் என்ற ஹோட்டலில் உள்ள நீச்சல் குளத்தில் தங்களுக்கு தேவையான உடைகள் மற்றும் உபகரணங்களுடன் இறங்கி நீண்ட நேரம் முத்தம் கொடுத்தபடி இருந்தனர். 

இதனை கண்ட சுற்றி இருந்தவர்கள் அவர்களை ஊக்கப்படுத்தினர். இவர்களுடைய முத்தம் 4 நிமிடங்கள் மற்றும் 6 வினாடிகள் வரை நீடித்தது. 

இதன் மூலம் 13 வருடங்களுக்கு முன்பு நீருக்குள் 3 நிமிடம் 24 வினாடிகள் முத்தம் கொடுத்தவரின் கின்னஸ் சாதனையை இவர்கள் முறியடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!