தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த பிரிட்டனின் ஸ்காட்லாந்து முதல் மந்திரி நிக்கோலா ஸ்டர்ஜன்
#Minister
#Resign
#Women
#world_news
#Tamilnews
#Lanka4
Prasu
2 years ago

பிரிட்டனின் ஸ்காட்லாந்து மாநில முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் நிகோலா ஸ்டர்ஜன் (வயது 53). ஸ்காட்லாந்து முதல் மந்திரியாக பதவி வகித்த முதல் பெண் மற்றும் நீண்ட காலம் பணியாற்றிய முதல் மந்திரி என்ற பெருமை பெற்ற இவர், ராஜினாமா செய்ய முடிவு செய்திருப்பதாக இன்று அறிவித்துள்ளார்.
ஆளுங்கட்சியான ஸ்காட்லாந்து தேசிய கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் நிகோலா ஸ்டர்ஜன் கூறியதாவது:- 8 ஆண்டுகள் ஸ்காட்லாந்து தேசிய கட்சிக்கு தலைமை தாங்கிய பிறகு, பதவி விலகுவதற்கு சரியான நேரம் இது. இப்போது பதவி விலகுவதே எனக்கும், எனது கட்சிக்கும், நாட்டுக்கும் சரியானது.
திருநங்கைகளின் உரிமைகள் பிரச்சனை பற்றி கட்சிக்குள் நிலவும் பிளவுகள் இருந்தாலும், இதன் காரணமாக பதவி விலகும் முடிவை எடுக்கவில்லை



