இலங்கையை போன்று பாகிஸ்தானில் பெட்ரோல் விலை மீண்டும் அதிகரிப்பு - ஒரு லிட்டர் 272 ரூபாய்க்கு விற்பனை

#Pakistan #Fuel #prices #world_news #Tamilnews #Lanka4
Prasu
2 years ago
இலங்கையை போன்று பாகிஸ்தானில் பெட்ரோல் விலை மீண்டும் அதிகரிப்பு - ஒரு லிட்டர் 272 ரூபாய்க்கு விற்பனை

பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். 

ஒரு லிட்டர் பால் ரூ.210-க்கு விற்கப்படுகிறது. கோழிகறி கிலோ ரூ.780 ஆக உள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தானில் பெட்ரோல் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

பெட்ரோல் லிட்டருக்கு ரூ.22.20 உயர்த்தப்பட்டு ரூ.272-க்கு விற்கப்படுகிறது. அதே போல் மண்ணெண்ணெய் ஒரு லிட்டருக்கு ரூ.12.90 அதிகரிக்கப்பட்டு ரூ.202.73 ஆக உள்ளது. 

டீசல் லிட்டருக்கு ரூ.9.60 உயர்த்தப்பட்டு ரூ.196.68-க்கு விற்கப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக அரசு அறிவித்துள்ளது. 

அதே போல் பொது விற்பனை வரி 17 சதவீதமாக இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!