கோடீஸ்வர வர்த்தகர் ஒனேஷ் கொலை தொடர்பாக வெளியான தகவல்

இலங்கையின் பிரதான உர இறக்குமதி நிறுவனமான ஒபெக்ஸ் ஹோல்டிங்ஸின் முகாமைத்துவப் பணிப்பாளரான கோடீஸ்வர வர்த்தகர் ஒனேஷ் சுபசிங்கவை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒனேஷ் சுபசிங்கவிற்கு பிரேசில் நாட்டைச் சேர்ந்த மனைவியினால் இந்த நாட்டில் பல தடவைகள் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமையும் உண்மைகள் தெரியவந்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த 3ஆம் திகதி , இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் அடுக்குமாடி குடியிருப்பில் உயிரிழந்த கோடீஸ்வர தொழிலதிபர் ஒனேஷ் சுபாசிங்கவின் சடலம் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கண்டெடுக்கப்பட்டது.
இதன்படி, நாட்டின் புலனாய்வுத் திணைக்களங்கள், நாட்டின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் மரணம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஒனேஷ் சுபசிங்கவின் மனைவி ரோசா சில்வா, நான்கு வயது மகள் மற்றும் பிரேசில் நாட்டு பணிப்பெண் ஆகியோர் கடந்த 3ஆம் திகதி டோஹா சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
பின்னர் அவர்கள் பிரேசிலின் சாவ் பாலோ நகருக்கு சென்றதாக சிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது.
பின்னர் கொழும்பில் உள்ள திரு. அலோஷ் சுபசிங்கவின் வீட்டில் சோதனை நடத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கிட்டத்தட்ட 25 பேரின் கைரேகைகள் மற்றும் DNA மாதிரிகளை அங்கு அனுப்பினர்.
மேலும், வீட்டில் இருந்த பல பொருட்களை அறிவியல் சான்றுக்காக சோகோ அதிகாரிகள் எடுத்துச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வீட்டின் வேலையாட்களிடம் நடத்திய விசாரணையில், சுபசிங்கவின் பிரேசில் நாட்டு மனைவிக்கும் அவருக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்ததை புலனாய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அந்த சமயங்களில் அவரது மனைவி தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், சுபசிங்க தனது மனைவியையும் பிள்ளையையும் பிரேசிலுக்கு அழைத்துச் செல்ல பல தடவைகள் முயற்சித்த போதும் சுபசிங்க அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அதன்படி விசாரணை அதிகாரிகள் கடந்த 14ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்தனர்.
இதற்கிடையில் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழு ஒன்று இந்தோனேசியாவின் ஜகார்த்தாவுக்கு அடுத்த வாரம் சென்று கூட்டு விசாரணை நடத்த உள்ளது.
ஒனேஷ் சுபசிங்கவின் மனைவிக்கும் அவரது உதவியாளருக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும், அவர்கள் பிரேசிலுக்கு தப்பிச் சென்றுள்ளதால், அவர்களைக் கைது செய்ய சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த உதவியாளர் பிரேசிலிய மாஃபியா குழுவைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



