பாகிஸ்தான் ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர குண்டுவெடிப்பு ஏற்பட்டு 2 பேர் உயிர் இழப்பு

பலுசிஸ்தானின் குவெட்டாவுக்கு சென்று கொண்டிருந்த ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த குண்டுவெடிப்பில் 2 பேர் உயிரிழந்தனர், 8 பேர் படுகாயமடைந்தனர்.
உள்ளூர் ஊடகங்களின்படி, பெஷாவரில் இருந்து குவெட்டா செல்லும் ஜாபர் எக்ஸ்பிரஸ் சிச்சாவட்னி ரயில் நிலையம் வழியாகச் சென்றபோது குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இந்த குண்டுவெடிப்பு எகனாமி வகுப்பு எண். 6ல் நடந்ததாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும், குண்டுவெடிப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.
ஜாபர் எக்ஸ்பிரஸில் இது இரண்டாவது குண்டுவெடிப்பு சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம், இந்த ரயிலில் இதுபோன்ற ஒரு குண்டுவெடிப்பு நிகழ்ந்தது, இதில் 8 பேர் படுகாயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பில் ஜாபர் எக்ஸ்பிரஸின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டது குறிப்பிடத்தக்கது.



