மாணவர்களுக்கு காலவரையின்றி விடுமுறை வழங்க தீர்மானம் !
#SriLanka
#Lanka4
#sri lanka tamil news
#Student
#Tamil Student
#Tamil
#Tamilnews
#Tamil People
Prabha Praneetha
2 years ago

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் 2020 -2021ஆம் ஆண்டு மாணவர்கள் தவிர்ந்த ஏனைய மாணவர்களுக்கு காலவரையின்றி விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த மாணவர்களை இன்று மாலை 4 மணிக்குள் விடுதிகளை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சப்ரகமுவ பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் உதய ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் இரு மாணவ குழுக்களுக்கிடையில் நேற்று இடம்பெற்ற மோதலை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோதலில் பாதிக்கப்பட்ட 09 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



