நடுக்கடலில் அடையாளம் தெரியாதவர்களால் தாக்கப்பட்ட ஆறு கடற்றொழிலாளர்கள் - தமிழக காவல்துறையினர் தகவல்

#SriLanka #sri lanka tamil news #Tamil People #Tamil #Tamilnews #Police #Lanka4 #லங்கா4
Prabha Praneetha
2 years ago
 நடுக்கடலில் அடையாளம் தெரியாதவர்களால் தாக்கப்பட்ட  ஆறு கடற்றொழிலாளர்கள் -  தமிழக காவல்துறையினர் தகவல்

தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு கடற்றொழிலாளர்கள் பருத்தித்துறை கோடியக்கரை அருகே நடுக்கடலில் அடையாளம் தெரியாதவர்களால் தாக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அத்துடன் அவர்களின் உடமைகளும் கொள்ளையடிக்கப்பட்டதாக தமிழக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆறு பேரையும் காயப்படுத்திய இந்த சம்பவம், உள்ளூர் கடற்றொழில்; கிராமங்களில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று கூறுகிறது.

இந்த தாக்குதலின்போது தமிழக கடற்றொழிலாளர் ஒருவரின் விரல் துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நம்பியார் நகரைச் சேர்ந்த இந்த கடற்றொழிலாளர்கள் கடந்த 14ஆம் திகதி மீன்பிடிக்கச் சென்று, பருத்தித்துறைக்கு தென்கிழக்கே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது தமிழக கடற்றொழிலாளர்களிடம் இருந்த ஜி.பி.எஸ்., கையடக்க தொலைபேசிகள், மீன்பிடி வலைகள் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன.

காயமடைந்தவர்களுக்கு புஷ்பவனம் கடற்கரையில் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தமிழக காவல்துறையினர் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!