இன்று முதல் தொடர்ச்சியான மின்சாரம்: காஞ்சன விஜேசேகர உறுதி
#SriLanka
#Sri Lanka President
#Power
#power cuts
#Power station
Mayoorikka
2 years ago

மின்சார சபையின் கட்டண திருத்தம் அமுல்படுத்தப்பட்டதையடுத்து, தற்போதைய மின்வெட்டு இன்று முதல் நிறுத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவாறு தெரிவித்தார்.
இதேவேளை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட மின்சார சபை கட்டண திருத்தத்தை அமுல்படுத்துவதன் மூலம் தடையின்றி மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
மின்சாரக் கட்டணத் திருத்தத்தின் அங்கீகாரத்துடன், நிலக்கரியை கொள்வனவு செய்வதற்காக 22 பில்லியன் ரூபா மேலதிக கடனாக வழங்குவதற்கு இலங்கை வங்கி இணக்கம் தெரிவித்ததாகவும் அமைச்சர் கூறினார்.



