உலகம் முழுவதும் 32 இடங்களில் நிலநடுக்கங்கள்!
#world_news
#Tamil People
#Tamil
#Tamilnews
#sri lanka tamil news
#Earthquake
#Death
Prabha Praneetha
2 years ago

கடந்த 24 மணித்தியாலங்களில் உலகம் முழுவதும் 32 இடங்களில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன .
இந்த நிலநடுக்கங்களில், அதிகபட்சமாக 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பிலிப்பைன்ஸில் பதிவாகியுள்ளது.
அத்துடன், நியூசிலாந்து, அலாஸ்கா, கொலம்பியா, டோங்கா, பொலிவியா உள்ளிட்ட பல நாடுகளில் 5 ரிக்டருக்கு மேல் வலிமை கொண்ட நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
பயங்கர சோகத்தை எதிர்கொண்ட துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, இந்த நிலநடுக்கங்களினால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பான தகவல்கள் எவையும் இதுவரையில் பதிவாகவில்லை.



