இன்று முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது? எரிசக்தி அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர்

இன்று முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்ததாக அறியமுடிகின்றது.
மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள காரணத்தினாலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
நேற்று(15) முதல் அமுலாகும் வகையில் 66 வீதத்தால் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
மின் கட்டணத்தை செலுத்துவதில் நிதி நெருக்கடியை எதிர்கொள்பவர்கள் தொடர்பில் நிதி அமைச்சு எதிர்காலத்தில் தீர்மானிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மின்சார கட்டண திருத்தம் அமுல்படுத்தப்பட்டவுடன் வாடிக்கையாளர்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



