உள்ளூராட்சி தேர்தலை தாமதமின்றி நடாத்த வேண்டும்: கரு ஜெயசூரிய

நீண்டகாலமாக தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தலும், வேட்புமனு கோரப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலும் முறையாக நடத்தப்பட வேண்டுமென நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
அரசாங்கமும் ஏனைய அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை நடத்த வேண்டும், அதில் இறையாண்மையை உரிய முறையில் பிரயோகித்து நல்லாட்சிக்கான வாய்ப்பு காலதாமதமின்றி வழங்கப்படும் என ஜெயசூரிய விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
“மக்களின் இறையாண்மையை பலவீனப்படுத்தும் எந்தவொரு செயலையும் நாங்கள் ஆதரிக்க மாட்டோம், உண்மையான மக்கள் கருத்தை அடிப்படையாகக் கொண்ட நிர்வாகக் கட்டமைப்பை நாங்கள் எப்போதும் ஆதரிப்போம்.
நீண்டகாலமாக தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தல் மற்றும் வேட்புமனுக்கள் கோரப்பட்டுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலும் முறையாக நடத்தப்பட வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.
உள்ளூராட்சி மன்றங்களுக்கு அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்களை நியமித்து, நாட்டின் மீது தேவையற்ற சுமையை திணிக்கும் தற்போதைய முறைமையிலும் எங்களுக்கு உடன்பாடு இல்லை.
நாட்டில் உருவாகி வரும் சிக்கலான நெருக்கடியை சரியாக மதிப்பிட்டு, பொது ஒற்றுமைக்கு வந்து, மக்களின் இறைமை அதிகாரம் கொண்ட தேர்தலை தாமதமின்றி முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என எமது அரசாங்கத்திடமும் ஏனைய அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. முறையாகப் பயன்படுத்தப்பட்டு, அதன் மூலம் வெளிப்படுத்தப்படும் பொதுக் கருத்து மூலம் நல்லாட்சிக்கான வாய்ப்பு வழங்கப்படும்



