ரஷிய ஆயுதப் படைகளை இழிவுபடுத்துதல், 20 வயது மாணவிக்கு10 ஆண்டு சிறை தண்டனைக்கு வாய்ப்பு..!
.jpg)
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை ஆரம்பத்தில் இருந்தே ரஷ்யர்களின் ஒரு பிரிவினர் எதிர்த்தனர். போராட்டம் நடத்துபவர்களை அதிபர் புதின் தலைமையிலான அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது.
இந்நிலையில், ரஷ்யாவின் ஆர்க்காங்கெல்ஸ்க் பகுதியைச் சேர்ந்த ஒலேஸ்யா என்ற 20 வயது பல்கலைக்கழக மாணவி, உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்யாவுக்கு எதிராக சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.போரில் ரஷ்யாவை விமர்சித்து தனது நண்பர்கள் பகிர்ந்த பதிவுகளையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
இந்த விவகாரத்தில் ஒலேஸ்யாவை கைது செய்த போலீசார், வீட்டுக்காவலில் வைத்தனர். அவளது ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்க அவள் காலில் "எலக்ட்ரானிக் டேக்" ஒன்றையும் நிறுவினர். வீட்டுக் காவலில் இருக்கும் ஒலேஸ்யா செல்போனில் பேசவோ, இணையத்தைப் பயன்படுத்தவோ அனுமதிக்கப்படவில்லை.
பயங்கரவாதத்தை நியாயப்படுத்தியதாகவும், ரஷ்ய ராணுவத்தை அவமதித்ததாகவும் ஓலேஸ்யா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.



