அதிகாரியின் நாய்களை பராமரிக்கும் பல்லேகல சிறைச்சாலை கைதிகள்

பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலையின் சிரேஷ்ட அதிகாரியொருவர் பல கைதிகளுக்கு தமது வளர்ப்பு நாய்களை பராமரிக்குமாறு பணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது மூன்று நாய்களை பராமரிப்பதற்காக நாளாந்தம் கிட்டத்தட்ட 06 கைதிகள் பணியமர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ குடியிருப்பில் செல்லப்பிராணிகளை வளர்க்கக் கூடாது என சிறைச்சாலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த திறந்தவெளி சிறைச்சாலையில் ஏறக்குறைய 15 உத்தியோகபூர்வ வீடுகள் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுகின்றன.
சிரேஷ்ட அதிகாரி தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அருகாமையில் மூன்று நாய்களை வளர்த்து வந்தமையினால் ஏனைய உத்தியோகபூர்வ இல்லங்களில் உள்ள சிறு குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரியின் தன்னிச்சையான நடவடிக்கைக்கு சிறைத்துறையின் மற்ற அதிகாரிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இவர் மீது இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



