இந்த கொடியை நீங்கள் வீட்டில் வளர்த்தால் சகல ஐஸ்வர்யங்களுடன் செல்வம் கொட்டித்தீர்க்கும்.

#ஆன்மீகம் #பணம் #கொடி #பயன்பாடு #லங்கா4 #spiritual #money #Plant #Benefits #Lanka4
இந்த கொடியை நீங்கள் வீட்டில் வளர்த்தால் சகல ஐஸ்வர்யங்களுடன் செல்வம் கொட்டித்தீர்க்கும்.

வீட்டில் பணவரவை அதிகரித்து செல்வத்தை பெருக்க விரும்புவோர் அழகுக்காக வைக்கும் செடி, கொடிகளுடன் முக்கியமாக இந்த கொடியையும் வைத்து வளர்த்தால் அனைத்து விதமான செல்வச் செழிப்புடன் ஐஸவர்யமாக வாழ அது வழிவகுக்கும்.

இந்த விசேஷ கொடியானது மணி பிளான்ட் என அழைக்கப்படும். இதனை வளர்ப்பது மிகவும் எளிது. இதை வளர்க்கும் விதமும் எப்படி பணவரவை கொண்டு வரும் என்பதையும் நாம் இனி பார்க்கலாம்.

இதை அதிக கவனம் எடுத்து பராமரிக்க வேண்டும் என்ற அவசியமும் இருக்காது சாதாரணமாக ஒரு மிட்டாய் பாட்டிலில் தண்ணீர் ஊற்றி அதில் மணி பிளாண்டின் ஒரு பகுதியை வைத்தால் கூட அது தளுத்து வேர் விட்டு கொடி போல அந்த இடத்திலேயே வளர்ந்து நம் வீட்டிற்கு அழகையும் தரும் சகல செல்வங்களையும் அள்ளித் தரும்.

முதலில் மணி பிளான்ட் செழிப்பாக வளர்வதற்கு, மணி பிளாண்டின் ஒரு கிளையை எடுத்து வந்து ஒரு டப்பாவில் தண்ணீர் ஊற்றி அதில் வைத்து வளர்க்க வேண்டும், ஊற்றி தளுத்து வேர் விட்டு வளர்ந்து வந்த பின்பு அந்த மணி பிளாண்டை நாம் ஏற்கனவே மண்ணை நிரப்பி வைத்திருக்கும் தொட்டியில் நட்டு வைக்கலாம்.

இப்படி நாம் நட்டு வைக்கும் மணி பிளாண்ட் செடிக்கு தண்ணீர் மிகவும் அவசியமானதாகும். அதுக்காக அளவுக்கு அதிகமான தண்ணீரையும் இந்த மணி பிளாண்ட் செடிக்கு நாம் ஊற்றக்கூடாது. நாம் மணி பிளாண்ட் நட்டு வைத்திருக்கும் மண் வறட்சி அடையாத அளவிற்கு தினமும் இரண்டு முறை தண்ணீர் ஊற்றி வந்தால போதுமானதாக இருக்கும்.

இப்படி நீங்கள் வைக்கும் மணி பிளான்ட் சூரிய வெளிச்சம் படும்படியாக வைத்தால் மணி பிளாண்டின் கொடி மடமடன செழிப்போடு வளர்ந்து உங்கள் வீட்டை அலங்கரித்து விடும். ஆனால் நம் வீட்டில் வளர்க்கும் மணி பிளாண்ட் செடி எவ்வளவு செழிப்பாக வளர்கிறதோ அவ்வளவு செல்வம் நம் வீட்டிற்கு வந்து சேரும் என்பது நம்பிக்கை.

மணி பிளான்டை வீட்டிற்கு வெளியே வளர்க்கும் போது தொட்டிகளில் வளர்ப்பதை விட நேரடியாக மணலில் நட்டு வளர்க்கும் போது அதன் வேகம் அதிகரித்து நன்கு செழிப்பாக வளரும்.

இப்படி நாம் வளர்த்த மணி பிளான்டை பக்குவமாக கையாள்ந்து, இலைகள் வாடினால் அவற்றை அகற்றி செல்லப்பிராணி போன்று பார்த்து வந்தால் அதுவும் செல்வத்தை கொட்டித் தீர்க்கும் வீட்டிலே.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4