மின் கட்டங்களை இணைக்கும் ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை இரண்டு மாதங்களுக்குள் ஆரம்பம்

#India #SriLanka #Lanka4
Kanimoli
2 years ago
 மின் கட்டங்களை இணைக்கும்  ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை இரண்டு மாதங்களுக்குள் ஆரம்பம்

இலங்கையும் இந்தியாவும் தங்களது மின் கட்டங்களை இணைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை இரண்டு மாதங்களுக்குள் ஆரம்பிக்கவுள்ளதாக இந்தியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகரை கோடிட்டு ரொய்ட்டர் தெரிவித்துள்ளது. 

கடந்த ஆண்டு, நெருக்கடி ஏற்பட்டதில் இருந்து, இந்தியா அதன் தெற்கு அண்டை நாடான இலங்கைக்கு சுமார் 4 பில்லியன் டாலர் உதவியை வழங்கியுள்ளது.

இந்தநிலையில் இலங்கையில், வர்த்தகம் மற்றும் முதலீடுகளை மேம்படுத்த முற்படுகிறது என்று என்று உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.
வளர்ச்சியைப் பொறுத்த வரையில், இந்தியா அந்த வாய்ப்பை இலங்கைக்கு வழங்குகிறது. 

எனவே அதை இலங்கை தொடர வேண்டும். இந்தியாவில் இருந்து சுற்றுலா, இந்தியாவில் இருந்து முதலீடு, இந்தியாவுடன் ஒருங்கிணைப்பு என்பவற்றை இலங்கை மேற்கொள்ளவேண்டும் என்றும் மொரகொட குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பொருளாதார மீட்சித் திட்டத்தின் முக்கியப் பங்கு,  வடக்கில் அதன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களை அபிவிருத்தி செய்வதில் தங்கியுள்ளது. 

இதன் மூலம், இலங்கையில் இருந்து எல்லை தாண்டிய கேபிள் மூலம் மின்சாரத்தை தென்னிந்தியாவிற்கு கொண்டு செல்ல முடியும்.
அந்த வகையில் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் இந்த கேபிள் பாதையை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை நம்புவதாக மிலிந்த மொரகொட கூறியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!