தந்தையை கத்தியை காட்டி மிரட்டிய 13 வயது சிறுவன்
#world_news
#China
Mani
2 years ago

சீனாவின் குவாங்சி பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் பள்ளி நேரத்துக்கு வெளியே பல மணி நேரம் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்தான். இதுகுறித்து அவரது பெற்றோர் பலமுறை எச்சரித்தும் அவர் கேட்கவில்லை. அதனால், தந்தை செல்போனை எடுத்து மறைத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் செல்போனை தந்தையிடம் திருப்பி கொடுக்குமாறு வற்புறுத்தியுள்ளார். அப்போது வீட்டில் இருந்த கத்தியை காட்டி தந்தையை மிரட்டினார். இந்த காட்சி வைரலாகி வருகிறது.
சிறுவனின் இந்த செயலால் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர், மேலும் செல்போன் கேம்களால் இதுபோன்ற நிலைகள் தொடரக்கூடாது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் சீன போலீஸார், சிறுவனுக்கு மனநல ஆலோசனை வழங்க முடிவு செய்துள்ளனர்.



