145 போதை மாத்திரைகளுடன் வைத்தியர் ஒருவர் கைது
#Arrest
#doctor
#Badulla
#Medicine
#SriLanka
#Lanka4
#sri lanka tamil news
Prathees
2 years ago

பதுளை, விஹாரகொட பிரதேசத்தில் 145 போதை மாத்திரைகளுடன் வைத்தியர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். சில தகவல்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது.
இவர் பதுளை பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் எனவும் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகத்திற்குரிய வைத்தியர் பதுளை மைலகஸ்தன்னவில் உள்ள தனது தனியார் வைத்திய நிலையத்தில் நீண்டகாலமாக பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அவர் பயணித்த காரையும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.



