நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் பாடப்புத்தகங்கள் விநியோகம்!
#SriLanka
#Ministry of Education
#education
#Student
#School
#Lanka4
Mayoorikka
2 years ago

நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் இலவச பாடப்புத்தகங்கள் வழங்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த மற்றும் இராஜாங்க கல்வி அமைச்சர் அரவிந்த் குமார் தலைமையில், ஹோமாகம பிடிபனவில் உள்ள கல்வி வெளியீட்டு திணைக்கள களஞ்சிய வளாகத்தில் பாடப்புத்தகங்கள் வழங்கும் அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது.
அங்கு உரையாற்றிய சுசில் பிரேமஜயந்த, பொதுவாக பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு சுமார் 450 கோடி ரூபா செலவிடப்படுவதாகவும், ஆனால் இம்முறை சுமார் 1600 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.



