கொரிய மொழித் தேர்ச்சிப் பரீட்சையில் நான்காயிரம் பேர் வரை சித்தியடைந்துள்ளனர்!
#SriLanka
#exam
#Student
#students
#Tamilnews
#Lanka4
Mayoorikka
2 years ago

2022ஆம் ஆண்டு நடைபெற்ற உற்பத்தித் துறையுடன் தொடர்புடைய ஆறாவது கொரிய மொழித் தேர்ச்சிப் பரீட்சையின் இரண்டாம் கட்டத்தில் 3950 பேர் சித்தியடைந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இந்தத் தேர்வு 04.07.2022 முதல் 03.02.2023 வரை ஆன்லைனில் நடத்தப்பட்டது. பரீட்சைக்கு 24378 பரீட்சார்த்திகள் விண்ணப்பித்த போதிலும் 18269 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.
பரீட்சை பெறுபேறுகள் www.slbfe.lk என்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதுடன், பரீட்சையில் சித்தியடைந்த பரீட்சார்த்திகளுக்கு நேர்முகப்பரீட்சைகள் மற்றும் மருத்துவப் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிக்கப்படும் என பணியகம் தெரிவித்துள்ளது.



