தியாகியும் தேர்தலும், யார் இந்த தியாகி? எதற்கு இவர் தேர்தலில் போட்டியிடுகிறார்?

யாழில் பிறந்து 50 வருட காலமாக வெளி நாடுகளில் உடல் வியர்வை மூளை வியர்வை சிந்தி, தனது தனிப்பட்ட உழைப்பால் உயர்ந்த ஒரு பெற்றோருக்கு நல்ல பிள்ளை, நல்ல கணவன், நல்ல தந்தை, நல்ல தாத்தா இந்த வாமதேவா தியாகேந்திரன். அதையும் தாண்டி ஒரு ஏழைகளின் காவலன்.
இவர் சுவிட்சர்லாந்தில் பல வருட காலங்கள் வாழும்பொளுதே சுவிஸ், இலங்கை, இந்தியா என பல நாடுகளில் வாழும் தேவை உள்ளவர்களை அடையாளம் கண்டு உதவியவர். உதவிக்கொண்டு இருப்பவர்.
இவர் மட்டுமல்ல இவரது குடும்ப அங்கதவர்களின் சிபார்சாலும் உலகளாவிய ரீதியில் பல நூறு கோடிகள் உதவி அப்பப்போ கிடைக்கிறது. கிடைத்துக்கொண்டிருக்கிறது.
அதை விட கொடைவள்ளல் தியாகி அவர்கள் 100 இற்க்கு மேற்ப்பட்ட வீடுகளை தனது சொந்த காணியில் கட்டி அவர்களுக்கே சொந்தமாக கொடுத்துள்ளார்.
அத்தோடு ஆரியகுளம் புனரமைப்பு. பார்வை அற்றவர்களுக்கு பார்வை கிடைக்க சிகிச்சை உதவி, இலங்கையில் பல மாவட்டங்களில் பல்கலைகழக மாணவர்களுக்கு உதவி, கொரோனா தொற்றின்பொளுது பல கோடிகள் உதவி, மகப்பேறு தொடர்பான உதவிகள் மற்றும் தினம் உலருணவு உதவியென நீண்டுகொண்டே போகிறது.
இவ்வுதவிகளை அவரோ அவரது குடும்பமோ வலது கை கொடுப்பது வலது கைக்கே தெரியாமல் செய்து வருகின்றனர்.
இப்பொழுது இவர் 2023 உள்ளூராட்சி தேர்தலில் யாழ் மாவட்டத்தில் காஸ் சின்னத்தில் 03 இலக்கத்தில் சுஜேட்ச்சையாக தேர்தலில் போட்டியிடுகிறார்.
இவர் தேர்தலில் நிற்ப்பது மேலும் தனது சேவைகளை தன் பணத்தில் மக்களுக்கு சேவை செய்யவே.
ஆம் நாம் இவரை வெல்ல வைப்பதனால் எமது மக்களுக்கு மேலும் உதவிகளும் உரிமைகளும் கிடைக்கும்.
எனவே நாம் இலங்கையில் இருப்பவர்களும் புலம்பெயர்ந்து மக்கள் மீது அக்கறை உள்ளவர்களும் இவர் வெல்ல ஆதரவு தர வேண்டுமென லங்கா4 (lanka4) ஊடகம் உங்களை வேண்டிக் கேட்டுக்கொள்கிறது.
இவரின் குறிக்கோள் அரச சலுகைகள், பணம், பதவி அல்ல மக்களுக்கு தடையில்காமல் சேவை செய்ய ஒரு அரச அங்கீகாரம்.
இவர் அரசுக்கோ, பிற அமைப்புகளுக்கோ, அரசியல் கட்சிகளுக்கோ எதிராகவோ பகையாகவோ போட்டியிடவில்லை. மாறாக இவர் நோக்கு மக்கள் சேவை மற்றும் வரும்கால சந்ததி அறிவாலும், ஆற்றலாலும், ஒழுக்கத்தோடும், மக்கள் சேவகர்களையும் உருவாக்குவதே.
ஆம் தியாகி ஐய்யாவை வெல்ல வைத்து மேலும் மக்கள் சேவையை அதிகரிப்போம்.



