ஜேர்மன்-இலங்கை இருதரப்பு உறவுகள் மேலும் வலுப்படும்: ஜனாதிபதியை சந்தித்த பீட்டர் ராம்சௌர்
#SriLanka
#Sri Lanka President
#Ranil wickremesinghe
#Meeting
#Tamilnews
#sri lanka tamil news
#Lanka4
Mayoorikka
2 years ago

ஜேர்மன் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி பீட்டர் ராம்சௌர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
ஜேர்மன்-இலங்கை இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பீட்டர் ராம்சோர் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.
பீட்டர் ராம்சரை மிகவும் அன்புடன் வரவேற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இரு நாடுகளுக்கும் இடையிலான கடந்த கால உறவுகளை நினைவுகூர்ந்து கலந்துரையாடினார்.
ஜேர்மன் அரசாங்கத்தின் அனுசரணையுடன் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அமுல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் மீளாய்வு செய்யப்பட்டதுடன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.



