மண்டோஸ் சூறாவளியால் வடகிழக்கில் உயிரிழந்த விலங்குகளுக்கு இழப்பீடு!

2022 டிசம்பரில் மண்டோஸ் சூறாவளியால் வடகிழக்கில் ஏற்பட்ட குளிர் காலநிலை காரணமாக உயிரிழந்த விலங்குகளுக்கு இழப்பீடாக 30 மில்லியன் ரூபாவை ஒதுக்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
கடும் குளிரின் காரணமாக வடகிழக்கு மாநிலத்தின் பல பகுதிகளில் ஏராளமான கால்நடைகள் மற்றும் ஆடுகள் உயிரிழந்துள்ளன.
இந்த கால்நடைகளுக்கு உரிய விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாய அமைச்சின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இதன்படி உயிரிழந்த விலங்குகளுக்கு 30.44 மில்லியன் ரூபா நட்டஈடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான காசோலைகளை விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர, கால்நடைப் பிரிவின் மேலதிக செயலாளர் கலாநிதி எல். டபிள்யூ. என். சமரநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது. உயிரிழந்த கால்நடைகளுக்கான நட்டஈட்டை வடக்கு மற்றும் கிழக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர்களே வழங்க வேண்டும்.
இதன் கீழ் வடக்கு மாகாணத்திற்கு 18.53 மில்லியன் ரூபாவும் கிழக்கு மாகாணத்திற்கு 11.9 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மாட்டிற்கு 20,000ரூபாவும்,, ஆட்டுக்கு 10,000 ரூபாவும் மற்றும் சிறு விலங்குகளுக்கு 5000 ரூபாவும் இழப்பீடாக வழங்கப்படும்.



