கோவா கடற்கரையில் காதல் ஜோடிகள் கடலில் மூழ்கி உயிரிழப்பு

உத்தரபிரதேச காதல் ஜோடிகளான விபு சர்மா (27) மற்றும் சுப்ரியா துபே (26) ஆகியோர் தங்கள் உறவை பெற்றோரிடம் இருந்து ரகசியமாக வைத்திருந்தனர். விபு டெல்லியில் உள்ள ஒரு நிறுவனத்திலும், சுப்ரியா பெங்களூரில் உள்ள ஒரு நிறுவனத்திலும் பணிபுரிந்து வந்தனர். இருவரும் காதலிப்பது அவர்களது பெற்றோருக்கு தெரியவில்லை.
இதற்கிடையில் விபு சர்மாவும், சுப்ரியா துபேயும் சில நாட்களுக்கு முன்பு காதலர் தினத்தை கொண்டாட கோவா சென்றனர். கோவாவில் தங்கி பல்வேறு சுற்றுப்பயணங்களை மேற்கொண்டனர்.
இந்நிலையில், நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்டதால், திங்கள்கிழமை நள்ளிரவு முதல் காதல் ஜோடி கோவாவில் உள்ள பலோலம் கடற்கரையில் பொழுதைக் கழித்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக இருவரும் அலையில் சிக்கி கடலில் மூழ்கினர்.
கடலில் மூழ்கிய 2 பேரை அறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களை மீட்டனர். ஆனால், இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.



