அரச அச்சகருக்கு ஜனாதிபதியின் அழுத்தம் இருப்பதாக, தேசிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.

#SriLanka #srilanka freedom party #sri lanka tamil news #Sajith Premadasa #Lanka4
Kanimoli
2 years ago
அரச அச்சகருக்கு ஜனாதிபதியின் அழுத்தம் இருப்பதாக, தேசிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.

வாக்குச் சீட்டுகள் அச்சிடுவதை இடைநிறுத்துவதற்கு, அரச அச்சகருக்கு ஜனாதிபதியின் அழுத்தம் இருப்பதாக, தேசிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.

எனவே அரச அச்சகரை, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைத்து இது தொடர்பில் கேள்வி எழுப்பப்படவேண்டும் என்று தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி வலியுறுத்தியுள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அரச அச்சக திணைக்களம் செயற்பட வேண்டும்

அதன் செயற்பாடுகளை சீர்குலைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும் ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச அச்சகர், ஜனாதிபதி மாளிகைக்கு வரவழைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது அவர் மீதான தாக்கத்தை வெளிப்படுத்துகிறது.
இந்த நாட்டு மக்களே அரச அச்சகருக்கு சம்பளம் வழங்குகின்றனர்.
எனவே பொதுமக்களுக்கு பதில் சொல்ல வேண்டியவர்கள். யாருடைய தாக்கத்துக்கும் ஆளாகாமல் கடமைகளை செய்யவேண்டும் என்று ஹந்துன்நெத்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

தேர்தலை நடாத்துவதற்கு ஏற்கனவே பெரும்பாலான செலவுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், வாக்குச் சீட்டு அச்சிடுவதை நிறுத்துவதற்கு எந்த காரணமும் இல்லை.
எனவே இங்கு உயர்மட்ட செல்வாக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!