திருப்பதி- முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான டிக்கெட் இன்று ஆன்லைனில் வெளியீடு.

#Temple #ஆன்மீகம் #ஆலயம் #spiritual
Mani
3 years ago
திருப்பதி- முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான டிக்கெட் இன்று ஆன்லைனில் வெளியீடு.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒவ்வொரு மாதமும் தனது இணையதளம் மூலம் அனைத்து தரிசன டிக்கெட்டுகளையும் வெளியிடுகிறது. அதாவது, டிசம்பருக்கு, மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோய்களால் அவதியுறுபவர்களுக்கான டிக்கெட்டுகள் ஒவ்வொரு மாதமும் இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன.
அதன்படி, திருமலை திருப்பதிக்கு பிப்ரவரி 22 முதல் பிப்ரவரி 28 வரை செல்ல விரும்பும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://online.tirupatibalaji.ap.gov.in வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டிக்கெட்டுகளை பக்தர்கள் இலவசமாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. காலை 10 மணிக்கும், மாலை 3 மணிக்கும் இருமுறை தரிசனம் வழங்கப்படும். மூத்த குடிமக்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் மதியம் 3 மணி தரிசனம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்கள் வயது சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ், நீண்ட கால தீராத நோய் உள்ளவர்கள் மருத்துவ சான்றிதழை கட்டாயம் கொண்டு வர வேண்டும். இந்த தகவலை மனதில் வைத்து பக்தர்கள் டிக்கெட் முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4