தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார்: பழ நெடுமாறன்

#SriLanka #Tamil Nadu #Tamil #Tamil People #Tamilnews #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
2 years ago
தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார்: பழ நெடுமாறன்

தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பிரபாகரன் நலமுடன், உயிருடன் உள்ளார் என உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை   சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பிரபாகரன் நலமுடன், உயிருடன் உள்ளார். பிரபாகரன் நலமுடன் இருப்பது ஈழத்தமிழர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும். பிரபாகரன் குறித்து தவறான தகவல் பரப்பப்பட்டு விட்டது. அவருடன் தொடர்பில்தான் உள்ளோம்.

பிரபாகரனின் அனுமதியின் பேரிலேயே செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறுகிறது. பிரபாகரனின் மனைவி, மகளும் நலமுடன் உள்ளனர். உரிய நேரத்தில் மக்கள் முன் வருவார். பிரபாகரன் எங்கு உள்ளார் என்பது தற்போது அறிவிக்க இயலாது.

தமிழக அரசும், மக்களும் பிரபாகரனுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இலங்கையில் ராஜபக்சேக்களின் ஆட்சி முடிவுக்கு வந்திருப்பதால் இந்த அறிவிப்பை வெளியிடுகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு முன்னரும் பல தடவைகள்  பிரபாகரன் உயிருடன் இருப்பதாக கூறிவந்த பழநெடுமாறன் இன்றைய தினமும் இவ்வாறு கூறியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!