பொதுஜன பெரமுனவின் ஆயிரம் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

#Election #Dallas Alagaperuma #SriLanka #sri lanka tamil news #Lanka4
Prathees
2 years ago
பொதுஜன பெரமுனவின் ஆயிரம் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

உள்ளூராட்சி மன்றங்களில் அங்கம் வகிக்கும் சுமார் ஆயிரம் பேரை பதவி நீக்கம் செய்வதற்கு ஒழுக்காற்று விசாரணைகளை நடத்த தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட உறுப்பினர்களுக்கு எழுத்து மூலம் பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

இவ்வருடம் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஏனைய அரசியல் கட்சிகள் மற்றும் கூட்டணிகளின் கீழ் போட்டியிடுவதற்காக அவர்கள் வேட்புமனுக்களை கையளித்துள்ளமையே இதற்குக் காரணம்.

காலி மாவட்டத்தில் மாத்திரம் ஹெலிகொப்டரில் போட்டியிடும் 124 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்இ எட்டு உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் 7 உப தலைவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார். 

இவ்வருட உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஹெலிகொப்டர் மூலம் போட்டியிடும் சுமார் முந்நூறு பேருக்கு ஒழுக்காற்று விசாரணைகள் நடத்தப்படும் எனத் தெரிவித்து கடிதங்கள் கிடைத்துள்ளதாக சம்பந்தப்பட்டவர்கள் தமக்கு அறிவித்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றுமொரு உள்ளூராட்சி உறுப்பினர்கள் குழுவானது இந்த வருட உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் திசைகாட்டி மற்றும் தொலைபேசி மூலம் போட்டியிடுவதாகவும், அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் நடத்தப்படும் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எழுத்துமூலம் அவர்களுக்கு அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!