எனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கிறேன்: ருஹுனு பல்கலைக்கழக உபவேந்தர்

பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்தின் செயலாளரான விரிவுரையாளர் ரொஹான் லக்சிறியின் உயிருக்கு தீங்கு விளைவிக்க முயன்றதாக தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை நிராகரிப்பதாக ருஹுனு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சுஜீவ அமரசேன தெரிவித்துள்ளார்.
அலுவலகத்திற்குள் விஷ வாயுவை செலுத்தி விரிவுரையாளரின் உயிருக்கு தீங்கு விளைவிக்க முயன்றதாக துணைவேந்தர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ருஹுனு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி சுஜீவ அமரசேனவை அப்பதவியில் இருந்து நீக்குமாறு கோரியும் எதிர்வரும் புதன்கிழமை அடையாள வேலை நிறுத்தமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ஷியாம் பன்னஹக்க தெரிவித்தார்.
எவ்வாறாயினும், தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரிப்பதாக ருஹுனு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி சுஜீவ அமரசேன தெரிவித்துள்ளார்.



