துருக்கி நிலநடுக்கத்தில் இலங்கைப் பெண்ணொருவர் பலி

#Turkey #Syria #Earthquake #Death #SriLanka #Lanka4 #Tamilnews
Prathees
2 years ago
துருக்கி நிலநடுக்கத்தில் இலங்கைப் பெண்ணொருவர் பலி

துருக்கி நிலநடுக்கத்தில் காணாமல் போயிருந்த இலங்கையை சேர்ந்த பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணின் சடலத்தை அவரது மகள் அடையாளம் காட்டியுள்ளதாக துருக்கிக்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

69 வயதுடைய வயோதிப பெண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

கண்டி கலகெதர பகுதியை சேர்ந்த குறித்த உயிரிழந்த பெண் 20 வருடங்களுக்கு முன்னர் துருக்கி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

துருக்கி மற்றும் வடமேற்கு சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29,000ஐ கடந்துள்ளது.

துருக்கியில் ஞாயிற்றுக்கிழமை இறப்பு எண்ணிக்கை 24,617 ஆக உயர்ந்தது, சிரியாவில் 4,500 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!