கிழக்கு மாகாண ஆளுநரின் கோரிக்கை, ஜனாதிபதி செயலகத்தால் நிராகரிக்கப்பட்டது!

#SriLanka #Sri Lanka President #sri lanka tamil news #Tamil #Tamilnews #government #Governor #Province
Prabha Praneetha
2 years ago
கிழக்கு மாகாண  ஆளுநரின் கோரிக்கை, ஜனாதிபதி செயலகத்தால்  நிராகரிக்கப்பட்டது!

கொழும்பில் தனது அலுவலகத்தை தொடர்ந்தும் பராமரிக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி செயலகம் நிராகரித்துள்ளது.

ஆளுநர் கொழும்பில் அலுவலகம் ஒன்றை வாடகைக்கு 18 மாதங்களாக  நடத்தி வந்தார். இது கடந்த வருட இறுதியுடன் காலாவதியானது.

இந்தநிலையில் கட்டிடங்களை வாடகைக்கு விடுவதற்கான தடையை அறிவிக்கும் சுற்றறிக்கையை நிதியமைச்சகம் வெளியிட்ட பின்னர், குத்தகை ஒப்பந்தத்தை நீடிப்பது இனி சாத்தியமில்லை.எனினும், "சிறப்பு ஒப்புதல்" மூலம் அலுவலகத்திற்கான குத்தகை ஒப்பந்தத்தை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஆளுநர் அலுவலகம் கேட்டுக் கொண்டது.

 இதனால் ஆளுநர் "திறம்பட தனது பணிகளைத் தொடர முடியும் என்றும் அந்த கோரிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும் ஜனாதிபதி அலுவலகம் இந்த கோரிக்கையை நிராகரித்துவிட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!