சிவனொளிபாத மலை ஏறும் போது குழந்தை பிரசவித்த பெண்
#Lanka4
#SriLanka
#sri lanka tamil news
#Tamilnews
Prathees
2 years ago

சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்ய மலை ஏறிக் கொண்டிருந்த வேளையில், ஊசி மலைப் பகுதியில் வைத்து அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு, அவ்விடத்திலேயே பெண் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார்.
இரத்தினபுரி பகுதியில் இருந்து சிவனொளிபாத மலைக்கு நேற்று தரிசனம் செய்ய வந்த 32 வயதுடைய பெண் ஒருவரே குழந்தையை பிரசவித்துள்ளார்.
பின்னர் தாயும் குழந்தையும் அம்புலன்ஸ் மூலம் திக் ஓயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக திக் ஓயா ஆதார வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



