தனியார் கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை- காதலர் தினத்தன்று மேயர் விடுத்துள்ள கோரிக்கை
#SriLanka
#sri lanka tamil news
#valentine
#Lanka4
#Tamil
#Tamilnews
#Tamil People
#Day
Prabha Praneetha
2 years ago
-1-1-1-1-1-1-1-1.jpg)
வருகின்ற 14 ஆம் திகதி காதலர் தினத்தன்று கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் இயங்கி வரும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை வழங்குமாறு கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ. எம்.றகீப் கோரிக்கை வைத்துள்ளார் ..
கல்முனை வாழ் பெற்றோர்கள், சமய அமைப்புகள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் முன்வைத்த சில முறைப்பாடுகளுக்கமைய இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று கல்முனை மாநகர மேயர் தெரிவித்தார்.
மற்றும் , பெற்றோர்களிடமும் தங்களது ஆண், பெண் பிள்ளைகளை அன்றைய தினத்தில் மேலதிக வகுப்புகளுக்கு அனுப்ப வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது" - என்றும் கல்முனை மாநகர மேயர் கூறியுள்ளார்.



