குதிரைப்படைப் பிரிவின் குதிரைகளுக்கு உள்ளூர் தானியங்களை வழங்குவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை வெற்றி
#SriLanka
#sri lanka tamil news
#Dollar
#Lanka4
Kanimoli
2 years ago

டொலர் நெருக்கடியின் விளைவாக இலங்கை பொலிஸ் குதிரைப்படைப் பிரிவின் குதிரைகளுக்கு உள்ளூர் தானியங்களை வழங்குவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் இதுவரை வெற்றியளித்துள்ளதாக அந்த பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையின் டொலர் நெருக்கடியின் காரணமாக குதிரைகளுக்கு தேவையான உணவை இறக்குமதி செய்ய முடியாத நிலையில், பச்சைப்பயறு, கொண்டைக்கடலை மற்றும் சோளம் போன்ற உள்ளூர் தானியங்களை படைப்பிரிவின் குதிரைகளுக்கு அளிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
குதிரைகளுக்குத் தேவையான உணவை இறக்குமதி செய்ய இயலாமை, இறுதியில் அவற்றின் எடையைக் குறைத்து மெலிந்து போவதற்கு காரணமானது.
எவ்வாறாயினும், புதிய வேலைத்திட்டத்தின் மூலம், குதிரைகளின் எடையில் ஒரு தெளிவான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளாதாக குதிரைப்படை பிரிவு தெரிவித்துள்ளது



