சீன உளவு பலூன் விவகாரத்தில் தொடர்புடைய ஆறு நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்த்த அமெரிக்கா

#China #America #Attack #Missile #world_news #Tamilnews #Lanka4
Prasu
2 years ago
சீன உளவு பலூன் விவகாரத்தில் தொடர்புடைய ஆறு நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்த்த அமெரிக்கா

அமெரிக்க நாட்டில் மென்டானா பகுதியில் வான்பரப்பில் கடந்த 6 ஆம் தேதி சீன உளவு பலூன் பறந்தது. இதனை சுட்டு வீழ்த்தும்படி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்திரவிட்டார். 

அந்த உத்தரவின் பேரில் ராணுவ அதிகாரிகள் அட்லாண்டிக் கடலின் மேல் பறந்து கொண்டிருந்த பலூனை சுட்டு வீழ்த்தி உள்ளனர். 

அதன் பின் கடலில் விழுந்த அதன் பாகங்களை கைப்பற்றிய ஆய்வும் மேற்கொண்டனர். இதில் அது சீனாவின் உளவு பலூன் தான் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சீனா 5 கண்டங்களையும் பல்வேறு நாடுகளையும் பல நாட்களாக உளவு  பார்த்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த நிலையில் இரண்டாவதாக கரோலினாவின் கடற்பரப்பிற்கு மேலே சீனாவின் மற்றொரு உலோக பலூன் பறந்துள்ளது. இதனை ராணுவ அதிகாரிகள் உடனடியாக சுட்டு வீழ்த்தி உள்ளனர். 

இந்த பலூன் உளவுத்துறை தகவல்களை சேகரிப்பதற்காகவே அனுப்பப்பட்டுள்ளது என அமெரிக்கா தொடர்ந்து சீனாவை குற்றம் சாட்டி வருகின்றது. 

ஆனால் சீனாவோ இதனை மறுத்து வருகின்றது. இந்த நிலையில் உளவு பலூன் விவகாரத்தால் பெய்ஜிங் நாஞ்சியாங்க் ஏரோஸ்பேஸ் டெக்னாலஜி நிறுவனம் போன்ற ஆறு சீன நிறுவனங்களை அமெரிக்க வர்த்தக அமைச்சகம் கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. 

இதனால் மேற்குறிப்பிட்ட நிறுவனங்களின் தயாரிப்புகளை அமெரிக்காவில் விற்பனை செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!