ஜனவரி மாத ராசிபலன் - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Lanka4
Prasu
1 day ago
ஜனவரி மாத ராசிபலன் - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்

பின்னால் மற்றவர்களைப் பற்றி புறம்பேசாதவர் நீங்கள். எதுவாக இருந்தாலும் நேருக்கு நேர் பேசுபவர்கள். உத்யோகஸ்தர்களுக்கு வேலையில் நல்லதொரு மேன்மை கிடைக்கும். 

நீங்கள் உயர் அதிகாரிகள் சொன்ன பணியை உடனுடக்குடன் செய்து முடித்து நற்பெயரை பெறுவீர்கள். வியாபாரிகள் தங்கள் சொந்த ஊரில் நிலங்கள் வாங்கி அதில் தங்கள் வியாபாரத்திற்கு தேவையானவைகளை வாங்கி குடோன்களாக பயன்படுத்துவர்.

குடும்பத் தலைவிகள் தங்கள் வீட்டிற்கு எளிய செலவில் கலைப் பொருட்களை கொண்டு அலங்கரிப்பீர்கள். கணவர் வீட்டார் தங்களுக்கு ஆதரவுத் தருவர்.

கலைஞர்களுக்கு தாங்கள் விரும்பிய பேனர்களில் இருந்து அழைப்பு வரும். அதில் சம்பாதிக்கும் ஒரு தொகையை வங்கிக் சகணக்கில் டெபாசிட் செய்வீர்கள்.

மாணவர்கள் தங்கள் சக மாணவர்களுடன் விடுதியில் இருக்கும் போது அவர்களிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம். அவர்களிடம் அனுசரித்து நடப்பது நல்லது. தேவையற்ற பிரச்சினையிலிருந்து தப்பிப்பது நன்மை தரும்.

பரிகாரம்

  • பிரத்தியங்கிராதேவிக்கு செவ்வாய் கிழமை அன்று அவரது பாதத்தில் அரளிப்பூக்களை வைத்து வழிபடுவது நல்லது.

ரிஷபம்

மற்றவர்கள் நிலையை அறிந்து பேசுபவர்கள் நீங்கள். மற்றவர்கள் பிரச்சினையை தன் பிரச்சினைப்போல் பாவிப்பவர்கள் நீங்கள்.

வேலைக்குச் செல்லும் உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் தங்களுக்கென்று சில முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படும். அதனை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

நகைக்கடை மற்றும் துணிமணிக் கடை வியாபாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு சற்று அலைச்சல்கள் ஏற்படும். இறுதியில் நல்ல லாபத்தை பெற இயலும்.

குடும்பத்தலைவிகள் தங்கள் மாமனார் மற்றும் நாத்தனார் உறவினர் வந்து போவர். ஒரு சிலர் தங்கள் கணவர் வீட்டுக்கும் சென்று வருவீர்கள். எதிர்பார்த்த சில ஆசைகளும் நிறைவேறும்.

கலைஞர்களுக்கு தங்கள் படம் நன்றாக ஓடும். ஒப்பனை செய்பவர்கள், கேமராமேன் போன்றவர்களுக்கு படம் ஒப்பந்தமாகும்.

மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காண்பிப்பர். எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற அதிக கவனமுடன் படித்து எழுதி பார்ப்பது மிக நல்லது.

பரிகாரம்

  • அருகிலுள்ள மகாலட்சுமி தாயாருக்கு அல்லது மகாலட்சுமி படத்தில் முல்லை பூச்சரம் கொடுத்து கும்பிடவும்.

மிதுனம்

உங்களுக்கு மற்றவர்களிடம் ஏமாறுவதும் பிடிக்காது. அதே போல் மற்றவர்களை ஏமாற்றுவதும் பிடிக்காது.

உத்யோகஸ்தர்களுக்கு வேலைகள் அதிகரிக்கும். நிர்வாகத்தின் மேலதிகாரிகளிடம் கவனமாகவும், வாக்குவாதம் செய்யாமலும் இருப்பது நல்லது.

வியாபாரிகளிடையே வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். தாங்கள் சம்பாதிக்கும் ஒருத் தொகையை முதலீட்டில் போடுவீர்கள். வெளிநாடு பயணம் மேற்கொள்வீர்கள்.

குடும்பத்தலைவிகள் தம்பதிகள் வெளியூர் பயணம் மேற்கொள்வர். குல தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள், பெண்களுக்கு பணம் புழங்கும். 

கலைஞர்களுக்கு தாங்கள் நினைத்தவாறே சம்பளம் கிடைக்கும். நீங்கள் நடித்த படத்தின் மூலம் பலப்படங்கள் தங்களுக்கு ஒப்பந்தமாவீர்கள்.

மாணவர்களுக்கு வகுப்பறையில் அமைதிகாப்பது நல்லது. வீண் அரட்டை வேண்டாம். ஆசிரியர் சொல்படி நடப்பது நன்மை தரும்.

பரிகாரம்

  • காமாட்சியம்மனை வெள்ளிக் கிழமை அன்று தரிசிப்பது நல்லது.

கடகம்

உத்யோகஸ்தர்களுக்கு உத்யோகத்தில் வேலைகள் அதிகரிக்கும். வீடு கட்ட தாங்கள் நினைத்த அளவில் அரசுக்கடன் கிடைக்கும். 

அலுவலகத்தில் மதிப்பு கூடும். வியாபாரிகளுக்கு வெளியூர் பயணம் ஏற்படும். அதனால் வெளியிடங்களிலும் தங்கள வியாபாரம் . அதனால் வியாபாரிகள் தங்களின் லாபமும் கூடும். 

குடும்பத் தலைவிகள் தங்கள் கணவரின் மனம் கோணாதவாறு நடப்பது நல்லது. குறிப்பாக முன் கோபம் வேண்டாம். தேவையற்ற வாக்குவாதமும் வேண்டாம். பொறுமை அவசியம்.

கலைஞர்களுக்கு தாங்கள் நடித்த படம் பல வருடங்கள் ஆகியும் வெளி வராமல் இருப்பவர்களுக்கு படம் திரையிடப்படும். மேலும், புதிய பட ஒப்பந்தம் செய்வீர்கள். 

மாணவர்கள் தற்போதிலிருந்தே தேர்வில் நன்கு மதிப்பெண்களை பெற சீக்கிரம் காலையில் எழுந்து நன்கு படிப்பது நல்லது.

பரிகாரம்

  • குரு பகவானுக்கு வியாழக் கிழமை குரு காயத்ரி மந்திரத்தை படித்து வணங்குவது நல்லது.

சிம்மம்

நிர்வாகத் திறன் மிக்கவர் நீங்கள்தான். அன்றன்றைய வேலையை அன்றே முடிப்பவர் நீங்கள். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு தாங்கள் நினைத்த இலக்கை எட்டுவது உறுதி.

தாங்கள் கேட்ட சில முக்கியமான சலுகைகள் கிடைக்கும். நீங்கள் வியாபாரம் விரிவடைய தேவையான சில தொழில்நுட்ப யுத்திகளை செய்து முடிப்பீர்கள்.

குடும்பத் தலைவிகளுக்கு குடும்பத் தலைவிகளுக்கு பணம் தாராளமாக புழங்கும். உறவினர், வருகை மகிழ்ச்சியைத் தரும். தங்கள் பிள்ளைகளுக்கு தேவையானதை செய்து மனம்கிழ்வீர்கள். 

கலைஞர்களுக்கு கலைஞர்கள் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை சவாலாக ஏற்று நடியுங்கள். அது தங்கள் வாழ்வை மாற்றக் கூடிய செயலாக அமையும். 

மாணவர்கள் படிப்பில் நல்ல ஆர்வம் ஏற்பட்டு நன்கு படிப்பர். பெற்றோர்கள் தாங்கள் நல்ல மதிப்பெண்களை பெற உதவிகரமாக இருப்பர்.

பரிகாரம்

  • வெங்கடேச பெருமாள் கோவிலுக்குச் சென்று புதன் கிழமை அன்று தரிசிப்பது நல்லது.

கன்னி

இயற்கையை ரசிப்பவர் நீங்கள். மலை சார்ந்த பகுதி தங்களுக்கு மிகவும் பிடிக்கும். உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் சக ஊழியர்கள் தங்களுக்கு ஆதரவாக இருப்பர். சம்பள உயர்வும் கிடைக்கும்.

வியாபாரிகளுக்கு வியாபாரிகளுக்கு தங்களின் தொழிலை விரிவாக்க தங்களுக்கு முதலீட்டுக்கு அரசு வங்கி கடன் கிடைத்து அதில் முதலீடுகளை செய்வீர்கள்.

குடும்பத் தலைவிகள் கணவரின் அன்பைப் பெறுவீர்கள். அவர்கள் தங்களுக்கு உதவிகரமாக இருப்பர். எதிர்ப்பார்த்த சில காரியங்கள் இனிதே முடியும்.

கலைஞர்களுக்கு உதாரணமாக டைரக்டர் தங்கள் கதையை பல காலமாக பலரிடம் சொன்னது வீண் போகாமல் பட வாய்ப்புக்கள் கிடைத்துவிடும்.

மாணவர்கள் எந்த பாடத்தில் குறைபாடு அதிகம் இருக்கிறதோ அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. அல்லது அதற்கென தனி டியூசன் எடுத்துக் கொள்வது மிக நல்லது.

பரிகாரம்

  • சனிக்கிழமை அன்று ஒன்பது முறை சனி பகவானை சுற்றி வந்து காகத்திற்கு எள்சாதம் வைப்பது நல்லது.

துலாம்

யாராக இருந்தாலும் நேருக்கு நேர் உண்மையை உடைத்து சொல்பவர் உத்யோகஸ்தர்களுக்கு தாங்கள் எதிர்பாராத நேரத்தில் விரும்பிய இடத்தில் தங்களுக்கு இடமாற்றத்துடன் சம்பள உயர்வும் கிடைக்கும்.

குடும்பத்தலைவிகள் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் எதிர்த்து பேசுவதை தவிர்ப்பது மற்றும் அவர்களின் தனிப்பட்ட விசயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.

கலைஞர்களுக்கு புது பேணர்களிடம் தங்கள் கதையை சொல்லி தாங்கள் அதில் ஒப்பந்தமாவீர்கள். அதன் மூலம் ஒரு பெரிய திருப்பம் தங்களுக்கு ஏற்படும். 

பெற்றோருடன் தேவையற்ற வாக்குவாதத்தில் கலந்து கொள்ள வேண்டாம். படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள். பின்பு அவர்கள் தங்கள் தவறினை உணர்ந்து விடுவர்.

பரிகாரம்

  • காளிஅம்மனுக்கு வெள்ளி கிழமை அன்று அரளிப் பூச்சரத்தை தரிவிப்பது நல்லது.

விருச்சிகம்

உங்கள் உண்மையான அன்பை புரிந்து கொள்ளாதவர்களே இங்கு அதிகமாக உள்ளார்கள். புரிந்து கொண்டவர்கள் பாக்கியசாலிகள்தான். உத்யோகஸ்தர்களுக்கு சக பணியாளர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. 

வியாபாரம் செய்பவர்களுக்கு நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். அந்த பயணத்தால் தாங்கள் நல்ல லாபத்தை பெறுவர். 

குடும்பத் தலைவிகள் வீட்டிற்குத் தேவையான சமையல் சாமான்களை வாங்கிக் குவிப்பர். பணப் பற்றாக்குறை நீங்கும். தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும். 

கலைஞர் பணவரவு சிறப்பாக இருக்கும். மேலும் மேலும் படங்களில் ஒப்ந்தமாவர். நினைத்தவாறு தாங்கள் தங்கள் இலக்கை அடைவீர்கள். நன்மதிப்பும் பெறுவர். 

மாணவ மாணவிகள் ஆசிரியரிடம் தங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்வது நல்லது. வெட்கப்பட வேண்டாம். நம் தேவையை கேட்டால்தான் தங்களது படிப்பில் முன்னேற முடியும்.

பரிகாரம்

சீனிவாசருக்கு துளசி மாலையை சனிக் கிழமை அன்று சாத்தி வணங்குவது நல்லது.

தனுசு

குறித்த நேரத்தில் சென்று விடுவீர்கள். அதே போல் மற்றவர்களிடம் எதிர்பார்ப்பீர்கள் நீங்கள். உத்யோகஸ்தர்களுக்கு இடமாற்றம் கிடைக்கும்.

வியாபாரிகள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் கோபப்படாதீர்கள். அவர்களிடம் சற்று பொறுமையைக் கையாள்வது நல்லது. இல்லாவிட்டால் வாடிக்கையாளர்களை இழக்க நேரிடும். 

குடும்பத் தலைவிகள் தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும். ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்வர். பணத்தினை ஒரு பகுதி நகை சீட்டாக போடுவீர்கள். 

கலைஞர்களுக்கு படப்பிடிப்புக்காக வெளியூர் அல்லது வெளிநாடு பயணம் மேற்கொள்வீர்கள். அதன் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். 

மாணவர்கள் வண்டி வாகனம் ஓட்டும்போது தாங்கள் வேகத்தை குறைப்பது நல்லது. கொஞ்சம் தாமதமாகச் சென்றாலும் அதற்காக கவலைப்படாமல் தங்கள் உயிரைக் காப்பது நல்லது.

பரிகாரம்

  • காளிகாம்பாள் அம்மனுக்கு வெள்ளிக் கிழமை அன்று மல்லிகை பூச்சரத்தை தரிவிப்பது நல்லது. 

மகரம் 

தாங்கள் பார்ப்பதற்கு வேலை செய்யாதவர் போல் இருப்பீர்கள். ஆனால், மற்றவர் அதிசயிக்கும் வகையில் சீக்கிரம் எல்லா வேலையையும் முடித்துக் காட்டுவதில் வல்லவர் நீங்கள்தான். 

உத்யோகஸ்தர்களுக்கு தங்கள் கடனை அடைத்து வீடடினை மீட்பீர்கள். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். தங்கள் பிள்ளைகளால் குடும்ப வருவாய் பெருகும். 

வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் அக்கறை காட்டுவதுடன் தங்கள் உடல் நிலையிலும் கவனம் செலுத்துவது நல்லது. காலம் தாழ்த்தாமல் உணவினை உட்கொள்வதும் மிக முக்கியமான ஒன்று. 

குடும்பத் தலைவிகளுடைய வீட்டில் இருந்து கொண்டு செய்யும் தொழில்களான கூடை பின்னுதல், கவரிங் ஆபரணங்கள் செய்தல் தையல் தொழில் போன்ற சுயதொழிலை செய்யுங்கள். 

கலைஞர்களுக்கு தாங்கள் விரும்பியவாறே கதாபாத்திரம் அமைந்து அதன் மூலம் பெரிய கதாபாத்திரம் கிடைக்கும். பல படங்களில் ஒப்பந்தமாவீர்கள். 

மாணவர்களுக்கு மாணவர்களின் நினைவுத் திறன் குறைவாக இருப்பவர்களுக்கு அன்றைய பாடங்களை அன்றே பலமுறைபடித்து எழுதி பார்த்து விடுவது நல்லது.

பரிகாரம் 

  • சாந்த நாயகி அம்மனுக்கு சிவப்பு மலரால் மாலையோ அல்லது பூச்சரமோ கொடுத்து கும்பிடவும்.

கும்பம்

நன்றி மிக்கவர் என்றால் அது நீங்கள்தான். யாராக இருந்தாலும் நினையில் வைத்து உதவிபுரிபவர் நீங்கள். உத்யோகஸ்தர்களுக்கு தங்களுடன் வேலை பார்க்கும் உங்கள் சக ஊழிர்களிடம் முன்கோபத்தை காட்டாமல் அவர்களிடம் அமைதி காப்பது நல்லது.

வியாபாரிகள் வெளியூர் மற்றும் வெளிநாடு பயணம் மேற்கொள்வீர்கள். தாங்கள் செல்லும்போது கவனக்குறைவாக இராமல் தங்கள் உடைமைகளை பாதுகாப்புடன் வைத்துக் கொள்வது நல்லது.

குடும்பத் தலைவிகளுடைய வீட்டில் தங்கள் சொல்லுக்கு மதிப்பும் மரியாதையும் கூடும். கணவர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார். பிள்ளைகள் தங்கள் சொல்படி நடப்பர்.

கலைஞர்களுக்கு திடீரென நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஒரு சிலர் முன் பணமே அதிகமாக பெற யோகமுண்டு.

மாணவர்கள் எதிரிபாலினரிடத்தில் அதிக நெருக்கமாக பழக வேண்டாம். அது தேவையற்ற தொல்லைகளைத் தரும். பெற்றோர் சொல்படி நடப்பது நல்லது.

பரிகாரம்

  • துர்கை அம்மனுக்கு ராகு காலத்தில் வெள்ளிக் கிழமை அன்று பால் முட்டை போடுவது நல்லது.

மீனம்

தங்கள் வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்து முடித்துக் காட்டுபவர் நீங்கள். உத்யோகஸ்தர்களுக்கு தங்கள் மேலதிகாரிகள் தங்களிடம் நெருக்கமாவர்.

வியாபாரிகளுக்கு தங்கள் வியாபாரத்தில் அதிகமான ஆர்டர்கள் கிடைக்கும். அதனை கவனக்குறைவால் காலதாமதமாக அனுப்பாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

குடும்பத்தலைவிகள் செலவினை கட்டுக்குள் வைப்பது நல்லது. செலவு செய்யும் போது தாங்கள் கவனமாகவும் அத்தியாவசிய தேவைக்கு மட்டும் செலவு செய்துக் கொள்ளுங்கள்.

கலைஞர்கள் என்றால் சினிமா மற்றும் சின்னத்திரையில் இருப்பவர்களுக்கு பாக்கித் தொகைகள் வந்து சேரும். இதற்கிடையே பெரிய பேனர்களில் இருந்து அழைப்பு வரும்.

மாணவர்கள் தங்கள் சக மாணவர்களுடன் வெளியில் செல்லும் போது நீர் நிலைகள் அதாவது குளம் மற்றும் ஆற்றுப்பகுதியில் குளிக்கும் போது மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது.

பரிகாரம்

  • வியாழக் கிழமை அன்று மஞ்சள் மலர் மாலையை குருவிற்கு அணிவித்து வழிபடுவது நல்லது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!