துருக்கி மற்றும் சிரிய நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25,000ஐ தாண்டியுள்ளது

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 25,000ஐ தாண்டியுள்ளது.
துருக்கியில் 24,000 க்கும் அதிகமான இறப்புகளும், சிரியாவில் 3,300 இறப்புகளும் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
5 நாட்களாக நடைபெற்று வரும் உயிர்காக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு விடுவிக்கப்படுபவர்களில் சிறு குழந்தைகளும் உள்ளடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எனினும், நிலநடுக்கத்தால் அழிக்கப்பட்ட துருக்கியின் சில பகுதிகளில் கடும் துர்நாற்றம் வீசுவதாக சில வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஆனால் இதுபோன்ற தடைகள் அல்லது மோசமான வானிலை இருந்தபோதிலும், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிவாரணக் குழுக்கள் தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களைக் கண்டறியும் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன.
இதற்கிடையில், நிலநடுக்கம் காரணமாக சிரியாவில் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழக்கக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.



