யாழ்ப்பாணத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட 18 பேர் கைது

#Jaffna #Arrest #Protest #NorthernProvince #Ranil wickremesinghe #Lanka4 #sri lanka tamil news
Prathees
2 years ago
யாழ்ப்பாணத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட 18 பேர் கைது

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்லராசா கஜேந்திரன் மற்றும் 18 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதே இது இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டோரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!