இந்தப்பரிகாரத்தை செய்வதன் மூலம் நீங்களும் பெரும் பணக்காரராக வரும் வாய்ப்புண்டு.

#ஆன்மீகம் #பணம் #அதிகம் #தகவல் #உழை #spiritual #work #money #Lanka4 #information
இந்தப்பரிகாரத்தை செய்வதன் மூலம் நீங்களும் பெரும் பணக்காரராக வரும் வாய்ப்புண்டு.

நாம் எல்லோரும் உழைப்பை நம்பி வாழ்பவர்கள். உழைத்துச் சம்பாதிக்கும் அனைவரும் பணக்காரர்கள் தான். அந்த பணத்தை எவ்வளவு வேகமாக சேர்க்கிறோமோ அந்த அளவிற்கு உழைப்பு மாத்திரமன்றி வேறு சில பரிகாரங்களையும் நாம் மேற்கொண்டாலேயே அந்தப் பணக்கார அந்தஸ்தை நாம் தக்க வைத்து மேலும் பணக்காரராகலாம்.

இதிலே பச்சை கற்பூரத்தை வைத்து வேகமாக பணக்காரர் ஆக ஒரு எளிமையான பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயமாக உங்கள் வீட்டில் இருக்கும் வறுமை முற்றிலும் நீங்கி வருமானம் உயர்வதை உங்களால் சில காலங்களிலே உணரமுடியும்.

 பரிகாரம் செய்ய தேவைப்படும் தண்ணீரை செவ்வாய்க்கிழமை முந்னைய தினமும், வெள்ளிக்கிழமைக்கு முந்னைய தினமும்  தண்ணீரை நீங்கள் தயார் செய்து வைத்து கொள்ள வேண்டும்.

பரிகாரம் செய்வதற்கு முந்தைய நாள் இரவு ஒரு டம்ளரில் சுத்தமான குடி தண்ணீரை ஊற்றி அதில் அரை ஸ்பூன் சீரகம், ஆரை ஸ்பூன் மஞ்சள் பொடி மற்றும் சிறிய துண்டு பச்சை கற்பூரத்தை சேர்த்து டம்பளரை பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

பரிகார நாளில் என்ன செய்ய வேண்டும் என்றால் இந்த தண்ணீரை மறுநாள் காலை அதாவது பரிகாரம் செய்யும் நாள் காலை எழுந்து தண்ணீரை ஒரு துணியை கொண்டு வடிகட்டி தண்ணீரை மட்டும் எடுத்துக் கொண்டு, இந்த தண்ணீரை நீங்கள் வாசல் தெளிக்கும் தண்ணீரோடு கலந்து வாசலில் தெளிக்க வேண்டும். நல்ல மனம் நிறைந்த இந்த தண்ணீரை கொண்டு நீங்கள் வாசல் தெளித்து கோலம் போடும் போது உங்கள் வீட்டிற்கு அப்படி ஒரு லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.

இந்த தண்ணீரில் இருந்து வரும் மணத்தை வீட்டில் இருப்பவர்களும் சுவாசிக்கும் போது, அந்த வாசம் உங்களுக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கும். வெளியே சென்று செய்யக்கூடிய வேலையை இன்னும் நீங்கள் சுறுசுறுப்பாக செய்யத் தொடங்குவீர்கள். வேலையை சுறுசுறுப்பாக செய்யும்போது வருமானமும் உயரும்.

பச்சை கற்பூரத்தை இப்படியும் செய்யுங்கள் அதுமட்டுமில்லாமல் இந்த தண்ணீரை கொஞ்சமாக வேறு எந்த சாதாரணமான தண்ணீரோடு கலக்காமல் அப்படியே எடுத்து வீட்டிற்குள் உள்ள மூலை முடுக்குகளில் தெளித்து வீட்டிற்குள் அந்த வாசம் வீடு முழுக்க நிரம்பி வழியும் உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு இது ஒரு மன நிம்மதியை கொடுக்கும்.

அன் பின்பு பச்சை கற்பூரத்தை உங்களுடைய வீட்டில் பணம் புழங்கும் இடமான பணப்பெட்டி, பணம் வைக்கும் பர்சில், குழந்தைகள் படிக்கின்ற புத்தகப்பையில் இப்படி எந்த இடங்களிலும் பச்சை கற்பூரத்தை வைத்தால் நேர்மறை ஆற்றல் அதிகரித்து நன்மைகள் நிறைய நடக்கும் நீங்களும் வேகமாக பணக்காரர் ஆகலாம்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4