கடன் திருப்பிக்கொடுக்கும் போது அது பிரச்சினைகளின்றி முற்றாக தீர்வதற்காக கையாளப்படும் ஆன்மீக முறைகள்.

#ஆன்மீகம் #பணம் #கடன் #லங்கா4 #தகவல் #spiritual #credit #money #Lanka4 #information
கடன் திருப்பிக்கொடுக்கும் போது அது பிரச்சினைகளின்றி முற்றாக தீர்வதற்காக கையாளப்படும் ஆன்மீக முறைகள்.

கடன் வாங்குவோர் எங்கும் உள்ளனர். இந்த கடன் வாங்கியவர்கள் தத்தம் கடனை திருப்பி செலுத்த மிகவும் கஷ்டப்படுவது சகஜம். இது வங்கி மூலமாகவோ அல்லது தனிநபர்களிடமிருந்தோ இருக்கலாம். எப்படியாயினும் அதனை திருப்பிச் செலுத்தி மீண்டும் பிசகின்றி கடன் பிரச்சினை இருக்கவும் கடன் தீரவும் மிக எளிதான ஆன்மீக முறைகளை நாம் இங்கு பின்பற்றும் விதங்களை பார்ப்போம்..

கடன் பிரச்சனை தீர

  • கடன் வாங்கியவர்கள் அஸ்வினி, அல்லது அனுஷம் நட்சத்திரத்தில் கடன் வாங்கிய அசல் தொகையில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் சுமை படிப்படியாக குறைந்து வரும்.
     
  • கடன் ஞாயிற்றுக்கிழமையில் வரும் சதுர்த்தி திதியன்றும், சனிக்கிழமையில் வரும் சதுர்த்தி திதியிலும் குளிகை நேரத்தில் நீங்கள் வாங்கிய கடனின் அசல் தொகையில் ஒரு பகுதியை திருப்பி கொடுத்தால் கடன் சீக்கிரம் தீரும்.
     
  • அஸ்வினி நட்சத்திர நாளில் மேஷ லக்னம் நடைபெறும் போது மற்றும் அனுஷ நட்சத்திர நாளில் விருச்சிக லக்னம் நடைபெறும்போது நீங்கள் யாரிடம் அதிகமாக கடன் வாங்கினீர்களோ, அவர்களிடம் வாங்கிய கடனின் அசலில் ஒரு சிறிய தொகையை கொடுத்தால் கடன் பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும்.
     
  •  நீங்கள் வாங்கிய கடனை அடைப்பதாக இருந்தாலும் அல்லது தவணை தொகையை செலுத்துவதாக இருந்தாலும் குளிகை நேரம் மற்றும் கரி நாட்களில் இதனை அடைப்பது சிறந்ததாக இருக்கும்.
     
  •  நீங்கள் வாங்கிய கடனை மரணயோகம் உள்ள நாட்களில் திருப்பிக் கொடுக்கும் போதும் கடன் பிரச்சனையும் தீர்ந்து விடும், மீண்டும் கடன் பிரச்சனை வராமலும் இருக்கும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4