வறுமை விடுத்து நீ... நாடி வந்து ஒரு நீதி கேட்டு நிற்க நாதியற்று போகும் வறுமை உன் சொந்தம். இன்றைய கவிதை 04-02-2023
#Poems
#today
#information
Mugunthan Mugunthan
2 years ago

வறுமை விடுத்து நீ
====================
நாடி வந்து ஒரு
நீதி கேட்டு நிற்க
நாதியற்று போகும்
வறுமை உன் சொந்தம்.
சிந்தை கொண்டு
நடந்தவை நீ பேச
தடுமாற்றம் வரும்.
பசியோடு வாழ.
சுற்றி வந்த உன்
சுற்றம் ஓடி மறையும்.
வந்து உனக்காக
தோள் தந்து நிற்காது.
வறுமை விட்டு நீ
தனியே வந்து
வறுமை போல
வாழ்ந்தாலும் பார்.
உன் புகழ் பாடி
உன் மூச்சுக்கு
முட்டுக் கொடுத்து
பேரம் பேசி வருவார்.
உன்னை நீ மாற்று.
விரையம் தடுத்து
விரும்பிடு நீ இனி.
வறுமை விடுத்து வாழ.
........ அன்புடன் நதுநசி.



