தெமட்டகொடையில் இளைஞன் ஒருவர் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொலை

#Colombo #Crime #Police
Prathees
2 years ago
தெமட்டகொடையில் இளைஞன் ஒருவர் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொலை

மாளிகாவத்தையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 24 வயதுடைய நபர் ஒருவரை வேனில் இருந்து கடத்திச் சென்று கடுமையாகத் தாக்கி கொலை செய்துள்ளதாக தெமட்டகொட பொலிஸார் தெரிவித்தனர்.

தெமட்டகொட லக் ஹிரு செவன அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இந்த இளைஞனை விசாரணைக்குட்படுத்த விரும்புவதாகக் கூறி குறித்த குழுவினர் கடத்தியதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடத்தப்பட்ட இளைஞன் கடுமையாகத் தாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு, அன்றைய தினம் ஏழு மணியளவில் அவர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு முன்பாக விடப்பட்டுள்ளார்.

பின்னர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

தெமட்டகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!