உழுந்து வடையில் கரப்பான்பூச்சி: உணவக உரிமையாளருக்கு 80 ஆயிரம் ரூபாய் அபராதம்

#Jaffna #Court Order #Food
Prathees
2 years ago
உழுந்து வடையில் கரப்பான்பூச்சி: உணவக உரிமையாளருக்கு 80 ஆயிரம் ரூபாய் அபராதம்

யாழ்ப்பாணம் நல்லூர் கோவிலுக்கு அருகில் உள்ள உணவகம் ஒன்றுக்கு காலை உணவாக வழங்கிய உழுந்து வடையில் கரப்பான் பூச்சி இருந்ததால் உணவக உரிமையாளருக்கு 80,000 ரூபா அபராதம் விதித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 04 ஆம் திகதி, குறித்த உணவகத்தில் காலை உணவை உண்பதற்காக சென்ற நபர் ஒருவர் தனது உழுந்து வடையில் கரப்பான் பூச்சி இருப்பதாக தெரிவித்ததையடுத்து, குறித்த நபர் அப்பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் அலுவலகத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.

பின்னர் பொதுசுகாதார பரிசோதகர்கள் வந்து உழுந்து வடையை பார்வையிட்டதுடன், உணவகத்தில் சுத்தமின்மை காரணமாக கடந்த ஜனவரி மாதம் 06 ஆம் திகதி உணவகத்தின் உரிமையாளருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு அன்றைய தினம் உணவகத்திற்கும் சீல் வைக்கப்பட்டது.

எனினும் இது தொடர்பான வழக்கு கடந்த 17ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ​​உணவக உரிமையாளருக்கு யாழ்.நீதிமன்றம், உழுந்து வடையில் கரப்பான் பூச்சி இருப்பதாகவும், சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அவர் பின்பற்றவில்லை என ஒப்புக்கொண்டு அபராதம் விதித்தார்.

அதன்படி உணவகத்திற்கு 60,000 ரூபாவும் சமையலறைக்கு 20,000 ரூபாவும் அபராதம் விதித்து யாழ்ப்பாணம் நீதிவான் பி.ஜஸ்டின் உத்தரவிட்டார்.

அத்துடன், முறையான சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி உணவகத்தை திறக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!