ரம்புக்கன இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் உண்மைகளை வெளிப்படுத்திய பிரதான சந்தேகநபர்

#Murder #Arrest #Police
Prathees
2 years ago
ரம்புக்கன இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில்  உண்மைகளை வெளிப்படுத்திய பிரதான சந்தேகநபர்

ரம்புக்கன, ஹுரிமலுவ பிரதேசத்தில் வீடொன்றின் பின்னால் இளைஞர்கள் இருவரைக் கொன்று புதைத்த வழக்கின் பிரதான சந்தேகநபரான ஹுரிமலுவையில் ஐஸ் போதைப்பொருள் வியாபாரியான ஃபர்ஹான் இன்று (19) கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் பகுதியில் பதுங்கியிருந்த நிலையில், இந்தக் கொலைகளுக்குத் தேடப்பட்டு வந்த ஹலீமுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஐஸ் போதைப்பொருள் கடத்தல்காரரான ஹுரிமலுவே பர்ஹான் என்ற மொஹமட் பர்ஹான் புத்தளம் நகரில் இருப்பதாக கேகாலை பிரதேச குற்றத்தடுப்பு பிரிவிற்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி அப்பகுதிக்கு சென்ற விசாரணை அதிகாரிகள் சந்தேகநபர் வீடொன்றில் பதுங்கியிருந்த நிலையில் கைது செய்துள்ளனர்.

மேலும், இது தொடர்பான கொலைகளுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபரான ஹலீம் என்பவரும் அவருடன் இருந்தபோதே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இருவருக்கு தங்கும் வசதியும் உணவும் வழங்கிய நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் காரொன்றையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளதுடன், சந்தேகநபர்களை இன்று பிற்பகல் கேகாலை பிரதேச குற்றத்தடுப்புப் பிரிவிற்கு அழைத்து வந்துள்ளனர்.

பின்னர், பிரதான சந்தேகநபரான ஹுரிமலுவே பர்ஹானிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​குறித்த இளைஞர் இருவரையும் கொல்லும் நோக்கத்தில் தாக்கவில்லை எனத் தெரிவித்தார்.

மேலும், உயிரிழந்த இரு இளைஞர்களும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு இறந்த பின்னர் புதைக்கப்பட்டதாகவும் சந்தேக நபர் பொலிஸாரின் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

பின்னர் சந்தேகநபர்கள் இருவரும் கொலை நடந்ததாக கூறப்படும் ஹுரிமலுவ பகுதியில் உள்ள அந்தந்த வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

கொலை செய்யப்பட்ட இடத்தையும் இரண்டு இளைஞர்கள் புதைக்கப்பட்ட இடத்தையும் சந்தேக நபர் பொலிஸ் அதிகாரிகளுக்குக் காட்டியுள்ளார்.

பின்னர் பிரதான சந்தேகநபர் ஹுரிமலுவவில் உள்ள ஃபர்ஹானின் தந்தையின் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, ​​கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு வாள்கள் மற்றும் இரும்பு கம்பியை நீர் தாங்கிக்கு அருகில் மறைத்து வைத்திருந்ததாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சந்தேகநபர்கள் நாளை கேகாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கேகாலை பிரதேச குற்றத்தடுப்புப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகரவின் பணிப்புரையின் பேரில் நிலைய கட்டளைத் தளபதி பொலிஸ் பரிசோதகர் அப்சரா அபேகுணசேகர மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!