நடிகர் வடிவேலுவின் தாயார் காலமானார் திரையுலக பிரபலங்கள் இரங்கல்!

#Cinema #TamilCinema #Death #Actor
Nila
2 years ago
நடிகர் வடிவேலுவின் தாயார் காலமானார் திரையுலக பிரபலங்கள் இரங்கல்!

தமிழ் திரை உலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான வைகைப்புயல் வடிவேலு வீட்டில் நிகழ்ந்த சோக நிகழ்வு காரணமாக திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் திரை உலகில் பல ஆண்டுகளாக நகைச்சுவை நடிகராக இருந்து வருபவரும் ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்து வருபவருமான வைகைப்புயல் வடிவேலுவின் தாயார் பாப்பா என்பவர் காலமானார். அவருக்கு வயது 87.

மதுரை விரகனூர் என்ற பகுதியில் வாழ்ந்து வந்த வடிவேலுவின் தாயார் பாப்பா என்பவர் கடந்த சில நாட்களாக உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வடிவேலுவின் தாயார் காலமானதை அடுத்து திரையுலக பிரபலங்கள் பலர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். வடிவேலுவின் தாயார் இறுதிச் சடங்கு இன்று மாலை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!