வாரிசு படத்தில் என்னுடைய கதாபாத்திரம் வேஸ்ட் என கவலைப்பட்ட நடிகர்

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படம் குடும்ப செண்டிமெண்ட் படம் என்பதால் எக்கச்சக்க பிரபலங்கள் நடித்திருந்தார்கள். ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, குஷ்பூ, பிரகாஷ் ராஜ், ஷாம், யோகி பாபு என பலர் நடித்திருந்தார்கள்.
ஆனால் வாரிசு படம் வெளியான பிறகு இதில் பாதி பேரை காணவில்லை. குஷ்பூ எப்போது வருவார் என காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு பேர் அதிர்ச்சியை இயக்குனர் கொடுத்திருந்தார். அதாவது படத்தில் குஷ்பூ காட்சியே வரவில்லை. மேலும் ஹீரோயின் ராஷ்மிகாவும் வேஸ்ட் தான்.
வாரிசு படத்திற்கு கிட்டத்தட்ட இரண்டே முக்கால் மணி நேரம் செலவாகி உள்ளது. இதில் குறிப்பாக விடிவி கணேஷ் மற்றும் ஸ்ரீமன் போன்ற கதாபாத்திரங்கள் தேவையில்லாத ஒன்றாக மாறி உள்ளது. அதிலும் இந்த படத்தில் காமெடி நடிகர் சதீஷின் கதாபாத்திரம் வேஸ்ட் தான்.
அவரை ஏன் இந்த படத்தில் உட்கார வைத்திருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை. இதுகுறித்து சதீஷ் ஒரு பேட்டியில் வெளிப்படையாக பேசி உள்ளார். அதாவது வாரிசு படத்தில் என்னுடைய கதாபாத்திரம் மொக்கை தான் என்பது தனக்கே தெரியும். ஆனால் விஜய் என்ற ஒரு மாஸ் ஹீரோ படத்தில் நடிப்பதற்காக மட்டுமே ஒத்துக் கொண்டேன்.
மற்றபடி இந்த கதாபாத்திரத்தில் தனக்கு எந்த ஸ்கோப்பும் இல்லை என்று சதீஷ் கூறியுள்ளார். இவ்வாறு வாரிசு படத்தில் பல கதாபாத்திரங்கள் சம்பிரதாயத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளார்கள். பிக் பாஸ் புகழ் சம்யுக்தாவும் ஒரே ஒரு காட்சியில் தான் இடம் பெற்றிருந்தார்.
இதனால் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருந்த பல கதாபாத்திரங்களை இயக்குனர் வீணடித்து உள்ளார். மேலும் வாரிசு படம் மோசமான விமர்சனங்களை பெறுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. பெரிய நடிகர்களின் படங்களில் இவ்வாறு நடப்பது சாதாரணம் தான் என சிலர் கூறி வருகிறார்கள்.



