அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் நிறுவனத்திற்கு 1.6 மில்லியன் டாலர் அபராதம் விதித்த நியூயார்க் நீதிமன்றம்

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் குடும்ப நிறுவனமான டிரம்ப் ஆர்கனைசேசனுக்கு உட்பட்ட தி டிரம்ப் கார்ப்பரேசன், டிரம்ப் பே ரோல் கார்ப் ஆகிய இரண்டு நிறுவனங்களும் பல ஆண்டுகளாக தவறான தகவல்களை அளித்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து இந்த நிறுவனங்கள் மீது வரி ஏய்ப்பு தொடர்பாக 17 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. வழக்கின் விசாரணை கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில், டிரம்பின் நிறுவனங்கள் மீதான குற்றச்சாட்டுகள் உறுதிபடுத்தப்பட்டது.
இதையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. டிரம்ப் ஆர்கனைசேசனுக்கு 1.6 மில்லியன் டாலர் (ரூ.13 கோடி) அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பானது, அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ள டிரம்புக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.



