எண்ணெய் மற்றும் எரிவாயு பற்றிய சட்டக் கட்டமைப்பு வெளியிடப்பட்டது.
Prabha Praneetha
2 years ago
-1-1.jpg)
இலங்கை பெற்றோலிய அபிவிருத்தி அதிகாரசபை (PDASL) நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்ட சுமார் 900 தொகுதிகளில் பொருத்தமான முதலீட்டாளர்களுடன் சொத்துக்களை ஆராயும் பணியை மீண்டும் ஆரம்பிக்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான அசாதாரண வர்த்தமானி அறிவித்தலை (2313/47) மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று வெளியிட்டார்.
"இலங்கையில் கடலோர எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு முதலீடுகளுக்கான சட்ட கட்டமைப்பை இறுதி செய்யும் விதிமுறைகளில் அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது" என்று அது கூறியது.
வர்த்தமானி அறிவித்தல் பின்வருமாறு:

gz

gzp




