பூஜையில் சிவனுக்கு அருளும் இலைகள், பிள்ளையாருக்கும் பொருந்துமா? பிள்ளையார் பற்றிய இன்றைய 5 தகவல்கள்.

#பிள்ளையார் #கணபதி #விநாயகர் #ஏகதந்தன் #ஐங்கரன் #spiritual #God #Pillaiyar #today #information
பூஜையில் சிவனுக்கு அருளும் இலைகள், பிள்ளையாருக்கும் பொருந்துமா? பிள்ளையார் பற்றிய இன்றைய 5 தகவல்கள்.
  • சிலர் கேட்கலாம் விநாயகரின் வாகனம் மூஞ்சுறு எவ்வாறு அவரை தாங்கலாம் என்று அதற்கு அர்த்தம் என்னவென்றால் அணு மிக நுண்ணியது ஆனால் ஆற்றல் அளப்பரியது என்பதை உணர்த்தும் மெய்ஞான அறிவுவே அதுவாகும்.
     
  • விநாயகரது மடித்து வைத்துள்ள ஒரு பாதம்  பூமியையும்,
    விநாயகரது சரிந்த தொந்தி நீரையும்,
    விநாயகரது மார்புப் பகுதி நெருப்பையும்,
    விநாயகரது இரண்டு புருவங்களின் இணைந்த அரை வட்ட வடிவம் காற்றையும்,
    அவற்றின் நடுவே வளைந்துள்ள கோடு ஆகாயத்தைக் குறிப்பதாகவும் அமைகின்றது
     
  • மனிதனிடம் இருக்கும் விலங்கு குணம், குழந்தை மனம், அருள் தன்மை, பெருந்தீனி, முரட்டுத்தனம், மென்மையான குணம் போன்றவற்றையும் வெளிப்படுத்தும் உருவமாக இருக்கின்றார் விநாயகர்.
     
  • நீ ஞானமும், நற்கல்வியும், நற்செயல்பாடுகளாலும் உன்னை உயர்த்திக்கொள் என்பதை உணர்த்துவதுவது விநாயகரின் வழிபாடு.
     
  • விநாயகர் சதுர்த்திக்குப் பூஜைக்கு உகந்த இலைகள். சிவனது பூஜைக்கு செய்யப்படும் அனைத்து இலைகளும், விநாயகரின் பூஜைக்கும் உகந்ததாக இருக்கிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4