சொத்துக்களை இழந்து கின்னஸ் சாதனை படைத்த உலகப் பிரபலம்!

#world_news
Mayoorikka
2 years ago
சொத்துக்களை இழந்து  கின்னஸ் சாதனை படைத்த உலகப் பிரபலம்!

உலகத்தின் பணக்காரர்களின் ஒருவரான எலான் மஸ்க் தற்பொழுது தனது சொத்துக்களை இழந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

 சமீபத்தில் ட்விட்டரை வாங்கியதும் அதன் முக்கிய பொறுப்பு அதிகாரிகளை பணியை விட்டு தூக்கிய எலான் மஸ்க், இனி ட்விட்டரில் ப்ளூடிக் பெறுவதற்கு மாதம் 8 டாலர்   கட்டணமாக செலுத்த வேண்டும் என அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இப்போது அவர் தனது சொத்துகளின் பெரும்பகுதியை இழந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.  

கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பரில் அவரின் சொத்து மதிப்பு 320 பில்லியன் டாலராக இருந்த நிலையில் தற்போது 137 பில்லியன் டாலராக அது குறைந்துள்ளது. 

இது இந்திய மதிப்பில் சுமார் 15 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இதன் மூலம் அதிக சொத்துகளை இழந்தவர் என்ற கின்னஸ் சாதனையை அவர் படைத்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!